வரலாறு



யது குல வீமன் (மலையமன்னர்) யதுகுல கேது(சுருதிமன்னர்) யாதவ குல தலைவர்களாகிய (நத்தமன்னர்) அரசிகரை உடையார்கள்(ஹோய்சாலர்) கத்திகாரர் (சுருதிமான்கள்) இவர்கள் அனைவரையும் பார்கவன் கோத்திரம் மூலம் ஒன்றாக்கி சங்கமாக உருவாக்கிய ஐயா மனம்பூண்டி குமாரசாமி நத்தமன் உடையாரின் பெரும் முயற்சியால் உருவான பார்க்கவ குலத்தில் எளிய மக்களின் குரலாக உருவாகிய பார்கவன் பாதுகாப்பு சங்கம் (பேரவை) 02/03/2016 முதல் செயல்படுகிறது.

இந்த நேரத்தில் பார்கவன் பாதுகாப்பு சங்கம் (பேரவை) தன் முன்னோர்களாகிய மலையமான் திருமுடிகாரி, நத்தமன்னாரகிய மெய்பொருள் நாயனார், கங்கர்களாகிய சுருதிமான்கள், சோழனின் படையில் முதன்மை தளபதியாக நின்று தனி ஒருவனாய் சாளுக்கிய மன்னன் சத்யசிரயனுடைய வேளத்தை அடித்து கொன்ற நக்கன் சுருதிமான், பாண்டியருக்கு உதவியாக போர்நடத்திய அரசிகரை நத்தமன்னர்,

சேரனின் கொட்டத்தை அடக்க காந்தளூர் படை எடுப்பில் முன்நின்று வென்ற கத்திகாரர்கள், பண்டைய காலம் தொட்டு இன்றளவும் தொடர்ச்சியாக கல்வெட்டு ஆதாரங்களை கொண்ட வேட்டவலம் வானதிராய நத்தமநயினார்( பண்டாரியர்) , இராமநாதபுரம் சிவகங்கை மாவட்டத்தில் பல ஊர்களை சொந்தமாக கொண்டு கோவில் அரச மரியாதை பெறும் அதங்குடி முதலாளிகள் கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகும் கண்டதேவி சிவன் கோவில் மண்டகப்படி மரியாதை பெரும் பஞ்சமாரி கிறித்தவ உடையார்கள் போன்றவர்கள் தன் முன்னோர்கள் என்பதை எண்ணி பெருமை கொள்கிறது.

பார்கவ குல மக்கள் தற்போதைய காலச்சூழலில் மூன்று சமயங்களில் குழுமி உள்ளனர் இந்து (சைவம், வைணவம்,சாக்கியம்), திருச்சி புதுக்கோட்டை அரியலூர் மாவட்ட உடையார்கள் ஜீயு போப(வீரமாமுனிவர்) காலத்திலும் இராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட நத்தமன்,மலையமான் உடையார்கள் போர்ச்சுகீசிய பாதிரியார் ஜான் டீ பீரிட்டோ காலத்திலும் ஏசுவின் அன்பால் ஈர்க்கப்பட்டு கிறித்தவ மார்கம் தழுவியுள்ளனர். புலால் தவிர்த்து சமணம் தழுவிய நத்தம நயினார்கள் .

பார்கவ குல மக்களின் பூர்வீகம் தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூரில் செழுமியும், பிற மாவட்டங்களான சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருவாரூர், கும்பகோணம், விழுப்புரம், கரூர், திருநெலஂவேலி, பேராவுரணி, பட்டுகோட்டை ஆகிய பகுதிகளில் பரவி உள்ளனர்.

மலையமான்களின் பட்டங்கள்(சேதிராயர், காமிண்டர், கவுண்டர், உடையார்)

நத்தமன்களின் பட்டங்கள் (உடையார், நயினார், பிள்ளை, முதலியார்)

சுருதிமான்களின் பட்டங்கள் (மூப்பனார், கத்திகாரர், வாண்டையார்)

இம்மக்கள் தங்களை காணிகள் (நிலங்களை) வைத்து பங்காளிகள் கணக்கிட்டுள்ளனர். சங்க காலம் தொட்டு 19 ஆம் நூற்றாண்டு வரை காரை (கழுத்தை ஒட்டிய தங்க அணிகளன்) அணிவர் .