விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

பார்க்கவன்‌ பாதுகாப்பு சங்கத்தின் (இளையதலைமுறை) உறுப்பினர்கள் யாவரும் கீழ்க்கண்ட விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

1.அனைத்து கலந்தாய்வு கூட்டம் மற்றும் சந்திப்பில், காலம் தாழ்த்தாமல் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ளப் பழக வேண்டும்.
2. தனி ஒருவரிடம் கருத்து வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக பேசி சுமூகமாக தீர்க்க பட வேண்டும். அவரை பற்றி மற்றவர்களிடம் அவதூறு பரப்பும் செயல்களை ஒரு போதும் செய்ய கூடாது.
3. தன்னுடைய கருத்து மட்டும் தான் சரியானது என்று நீண்ட நெடிய விவாதத்தை மற்றவர்களிடம் முன்வைக்க கூடாது.
4.சங்கத்தில் எவரேனும் தவறான செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்களை பற்றி மாவட்ட நிர்வாகியிடம் அல்லது தலைமைக் குழுவிடம் கொண்டு சென்று அதை நிவர்த்தி செய்யலாம்.
5.எப்போதும் குறை மட்டுமே கூறி கொண்டு இல்லாமல், மற்றவர்களின் நிறைகளை மனதார புகழக் கற்று கொள்ள வேண்டும்.
6.களப்பணி அல்லது விழிப்புணர்வு பேரணி போன்றவற்றில், தனி மனித துதி பாடல் இல்லாமல், செயல்களின் அடிப்படையில் சம்பந்த பட்ட குழுவை அங்கீகரிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
7.அனைத்து செயல்களிலும் நம்பகத்தன்மை (Accountability) மற்றும் வெளிப்படைத்தன்மை (Transparency) மிக முக்கியம்.
8. தான் எடுத்து கொண்ட களப்பணியை யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் செவ்வனே செய்து முடிப்பேன் என்று முழு மன நிறைவோடு செய்ய வேண்டும்.
9.தலைமையின் செயல்பாடுகளில் கேள்வியெழுப்ப உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு. தக்க விளக்கமளிப்பதும் தலைமையின் கடமையாகும். சங்கத்தின் செயல்பாடுகளில் முரண்பாடு ஏற்படும்போது அமைப்பைப் (சங்கத்தை) பொதுவெளியில் தூற்றாமல் தாமாக விலகிவிட வேண்டும்.
10.யாருடைய செயல்பாடுகளும் பதவியை நோக்கியோ அல்லது வருமானம் ஈட்டும் நோக்கத்தோடு இருக்க கூடாது.